எகிறும் எதிர்பார்ப்பு: 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘சலார்’ டிரைலர்.

photo

பிரபாஸ் நடிப்பில் தயாராகிவரும் சலார் படத்தின் டிரைலர் நேற்று  வெளியான நிலையில் தற்போது 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக  படக்குழு அறிவித்துள்ளது.


பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் தயாராகிவரும் படம் சலார். ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். நடிகர் பிருத்விராஜ் வில்லனாக நடித்துள்ளார். தமிழ், மலையாளம் ,கன்னடம், இந்தி, தெலுங்கு  உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக தயாராகிவரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை மாற்றப்பட்டு ஒரு வழியாக டிசம்பர்22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் நேற்று படத்தின் டிரைலர் வெளியானது. டிரைலர் மிரட்டலான வகையில் வெளியான டிரைலர் தற்போது 75 மில்லியன் பார்வையாளர்களை 24 மணிநேரத்திற்குள்ளாகவே கடந்து சாதனை படைத்துள்ளது.

Share this story