‘சலார்’ பட ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
பிரபாஸ் நடிப்பில் தயாராகியுள்ள ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
ஹோம்பளே பிலிம்ஸ் தயாரிப்பில், கேஜிஎஃப் பட இயக்குநரான பிரசாந்த் நீல் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் ‘சலார்’. பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகியுள்ள இந்த படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, பிருத்விராஜ் என பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 28ஆம் தேதி வெளியாகவிருந்த இந்த படம் சில பல காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு தற்போது புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வரும் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அதற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். படம் தமிழ், மலையாளம் ,தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.