‘சலார்’ பட டிரைலர் குறித்த அப்டேட்!

photo

பிரபாஸ் நடிப்பில் தயாராகிவரும் சலார் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்பது குறித்த அப்டேட் வந்துள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் தயாராகிவரும் படம் சலார். ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். நடிகர் பிருத்விராஜ் வில்லனாக நடித்துள்ளார். தமிழ், மலையாளம் ,கன்னடம், இந்தி, தெலுங்கு  உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக தயாராகிவரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை மாற்றப்பட்டு ஒரு வழியாக டிசம்பர்22ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்ற தகவல் வந்துள்ளது  அதன்படி வரும் டிசம்பர் 1ஆம்ட் தேதி இரவு 7.19 மணிக்கு டிரைலர் வெளியாகவுள்ளது.

Share this story