பிரபாஸ் படத்தில் வில்லனாகும் கன்னட நடிகர்…’சலா‌ர்’ படத்தின் அப்டேட்…

பிரபாஸ் படத்தில் வில்லனாகும் கன்னட நடிகர்…’சலா‌ர்’ படத்தின் அப்டேட்…

‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக பிரபல கன்னட நடிகர் ஒருவர் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

பிரபாஸ் படத்தில் வில்லனாகும் கன்னட நடிகர்…’சலா‌ர்’ படத்தின் அப்டேட்…

யாஷ் நடித்து சூப்பர் ஹிட்டான படம் கேஜிஎப். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்க உள்ளார். தெலுங்கு, கன்னடம், இந்தி, தமிழ்,மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

பிரபாஸ் படத்தில் வில்லனாகும் கன்னட நடிகர்…’சலா‌ர்’ படத்தின் அப்டேட்…

இந்நிலையில் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வந்த நிலையில் வில்லனாக இந்த படத்தில் யார் நடிப்பார் என எதிர்பார்ப்பு இருந்தது.இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பிரபல கன்னட நடிகரான மது குருசாமி சலார் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம். இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். இவர் கன்னடத்தில் வெளியான முப்டி, வஜ்ரகயா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story