சல்மான்கானின் சகோதரருக்கு இரண்டாவது திருமணம்

சல்மான்கானின் சகோதரருக்கு இரண்டாவது திருமணம்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான்கான். இவரது சகோதரரும் நடிகரும் தயாரிப்பாளருமான அர்பாஸ்கான் தனது 56-வது வயதில் இரண்டாவது திருமணம் முடித்துக் கொண்டார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. கடந்த டிசம்பர் 24-ம் தேதி இவர்களின் திருமணம் எளிமையாக நடைபெற்று முடிந்துத. பிரபலங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இவர் நடிகை மலைக்கா அரோராவின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி, பின்னர் 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

சல்மான்கானின் சகோதரருக்கு இரண்டாவது திருமணம்

இந்த ஜோடிக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

Share this story