‘நான் வாய் திறந்தா சமந்தா மானம் போய்டும்’ – மீண்டும் தொடங்கிய வார்த்தை போர்.

photo

நடிகை சமந்தா மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு இடையே கடுமையான வார்த்தை சண்டை நடந்து வந்த  நிலையில் தற்போது அது மீண்டும்  விஸ்வரூபம் எடுத்துள்ளது.

photo

சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான சகுந்தலம் படத்தின் தோல்வியை தொடந்து தெலுங்கில் பிரபல தயாரிப்பாளரான சிட்டி பாபு சமந்தா குறித்து கடுமையாக விமர்சித்தார். அதாவது, “யசோதா படம் வெளியான சமயத்தில் புரொமோஷனில் கலந்துகொண்டு கண்ணீர் விட்டார், அதே  யுத்தியை சாகுந்தலம் படத்திற்கும் செய்தார் ஆனால் கைகொடுக்கவில்லை. சென்டிமென்ட்  எல்லா நேரத்திலும் கை கொடுக்காது. சமந்தா ஸ்டார் ஹீரோயின்  அந்தஸ்தை இழந்துவிட்டார். கதாநாயகியாக அவரது கேரியர் முடிந்துவிட்டது. இனி எந்த மலிவான செயலும் எடுபடாது, கதையும், கதாப்பாத்திரமும் நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் ரசிப்பார்கள்” என அவர் கூறியிருந்தார்.

photo

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமந்தா சிட்டி பாபு பெயரை குறிப்பிடாமல் இன்ஸ்டாகிராமில் ‘காதுகளில் முடி எப்படி வளரும்’ என கூகுளில் தேடி அதற்கு பதிலாக  வந்த அதிக ஹார்மோன் சுரப்பாதால் என்ற பதிலை ஸ்க்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் சிட்டிபாபு சமந்தா குறித்து பேசியுள்ளார்.  அதாவது “ என் பெயரை சமந்தா அந்த பதிவில் குறிப்பிடவில்லை. எனது காதுமடலில் உள்ள முடிகள் குறித்து பேசுவதற்கு பதிலாக நான் கூறியதற்கு அவர் பதில் சொல்லி இருக்கலாம். சமந்தா பற்றி நான் வாய் திறந்தால் அவர் மானம் போய்விடும் என மிக காட்டமாக எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார்.

Share this story