‘குஷி’ படத்திற்கு ‘U/A‘.. சமந்தா படத்தின் சென்சார் தகவல் !

kushi
சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘குஷி’ படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. 

சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்துள்ள ‘குஷி’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி இயக்குனர் சிவ நிர்வணா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. 

kushi

 மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 165 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'ஹ்ரிதயம்' படத்திற்கு இசையமைத்த ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

Share this story