‘இந்த தருணத்திற்காகதான் பல நாட்களா காத்திருந்தேன்’ – கண்ணீர் விட்ட சாம்.

photo

சமந்தாவின் அசத்தலான நடிப்பில் ‘சகுந்தலம்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்றது. இந்த நிலையில் படத்தின்புரொமோஷனின் ஒரு பகுதியாக இன்று படக்குழுவினர் ஐதராபாத்தில் டிரைலரை வெளியிட்டு படம் குறித்து பேசினர். இந்த விழாவில் நடிகை சமந்தா மிகவும் எமோஷனலாகி கண்ணீர் விட்டுள்ளார்.

photo

இந்த விழாவில் பேசிய இயக்குநர் குணசேகரன், “சகுந்தலம் படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான். சாகுந்தலா கதாபாத்திரத்திற்கு பலரை நடிக்க வைக்க முயன்றோம், இறுதியில் தயாரிப்பாளர் நீலிமா தான் சமந்தாவை பரிந்துரை செய்தார்” என கூறியதும் சமந்த கண்ணீர் விட்டார்.

photo

தொடர்ந்து பேசிய சாம், “இந்த தருணத்திற்காகத்தான் பல நாட்களாக காத்திருந்தேன். படம் எதிர்பார்த்தபடி ரிலீசாக வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் மட்டும் ஒரு சில மாயம் நடக்கும். அப்படித் தான் சாகுந்தலம் படத்துக்கும் நடந்தது. எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை” என சமந்தா சினிமா மீதான் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல கஷ்டங்களை சந்தித்து வரும் சமந்தா விரைவில் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

photo

Share this story