விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நெருக்கம்.. கடுப்பான நாக சைதன்யா !

samantha

விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நெருக்கமாக இருந்த காட்சியை பார்த்து நடிகர் நாக சைதன்யா தியேட்டரை விட்டு வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குஷி’. காதல், ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள அந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து சமந்தா நடித்துள்ளார். 

samantha

இதற்கிடையே தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் நடிகை சமந்தார். இருவரும் ஒன்றாக சில ஆண்டு வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு சமரசமாக பிரிந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் தெலுங்கில் வெளியான ‘பாய்ஸ் ஹாஸ்டல்’ படத்தின் சிறப்பு காட்சி ஒன்று நடிகர் நாக சைதன்யாவிற்கு திரையிடப்பட்டது. 

samantha

அப்போது படத்தின் இடைவேளையில் சமந்தாவின் ‘குஷி’ படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. இதை பார்த்த நடிகர் நாகசைதன்யா, உடனடியாக திரையரங்கிலிருந்து வெளியேறினார். ‘குஷி’ படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நெருக்கமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story