பிரபாஸுடன் கைகோர்க்கும் சந்தோஷ் நாராயணன்... தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் அசத்தல் !

project k

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளார். 

ஆதி புருஷ், சலார் ஆகிய படங்களுக்கு பிறகு ‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வருகிறார். தேசிய விருதுபெற்ற ‘மகாநதி’ படத்தை இயக்கி நாக் அஸ்வின் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

project k

இந்த படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ், இந்தி என இப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. 

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவுபெற்றுவிட்டது. இன்றும் 10 - 15 நாட்கள் மட்டுமே இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதன்பிறகு 5-ல் இருந்து 6 மாதம் விஎப்எக்ஸ் பணிகள் நடைபெறவிருக்கிறது. அதனால் திட்டப்படி படம் வெளியாகும் என தெரிகிறது. 

project k

இப்படத்தில் ஏற்கனவே மிக்கி ஜே மெயர் என்பவர் இசையமைப்பாளராக பணியாற்றி வந்தார். சில காரணங்களால் அவர் படத்திலிருந்து சமீபத்தில் விலகிவிட்டார். இந்நிலையில் இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணியாற்றவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து பாலிவுட் பெண் இசையமைப்பாளர் ஒருவர் இந்த படத்தில் பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story