இங்கிலாந்தில் எம்புரான் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தீவிரம்

இங்கிலாந்தில் எம்புரான் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தீவிரம்

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரித்விராஜ் 'லூசிபர்' படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். விவேக் ஓபராய், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் அப்படத்தில் நடித்திருந்தனர். தான் இயக்கிய முதல் படத்திலேயே 100 கோடி வசூல் கொடுத்து, சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்து காட்டினார் பிரித்விராஜ். லூசிபர் திரைப்படம் மலையாளத்தில் இன்ஸ்டஸ்ட்ரி ஹிட் வெற்றி பெற்றது. மோகன்லால் படம் முழுக்க ஸ்வாக்(Swag) செய்திருந்தார். 

இங்கிலாந்தில் எம்புரான் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தீவிரம்

லூசிபர் படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. படத்திற்கு எம்புரான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த பாகத்தையும் பிரித்விராஜ் தான் இயக்குகிறார். மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Share this story