தெலுங்கில் புதிய படம் நடிக்கும் செல்வராகவன்
1698310663869
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக இருப்பவர் செல்வராகவன். அவர் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்கள் இன்றைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது ரசிகர் அவதாரம் எடுத்துள்ள அவர் பிசியாக நடித்து வருகிறார். ஏற்கனவே சாணிக் காயிதம், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார். அறிமுக இயக்குனர் ரங்கநாதன் இயக்கத்திலும் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கில் தற்போது முதல் முறையாக நடிக்க உள்ளார். கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் ரவி தேஜா நடிக்கும் இப்படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார்.

