முதன்முறையாக இணைந்து நடிக்கும் ஷாருக்கான், சுஹானா கான்

முதன்முறையாக இணைந்து நடிக்கும் ஷாருக்கான், சுஹானா கான்

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடிக்க, படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் தீபிகா படுகோனே சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இதற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. மேலும், ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

முதன்முறையாக இணைந்து நடிக்கும் ஷாருக்கான், சுஹானா கான்

ஷாருக்கான் நடிப்பில் அடுத்ததாக உருவாகியிருக்கும் திரைப்படம் டன்கி. ராஜ்குமார் ஹிரானி இந்த திரைப்படத்தை  இயக்குகிறார். படத்தில் சதீஷ் ஷா, விக்கி கௌஷல், தியா மிர்சா, டாப்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

முதன்முறையாக இணைந்து நடிக்கும் ஷாருக்கான், சுஹானா கான்

இந்நிலையில், ஷாருக்கானும், அவரது மகளும் மாடலுமான சுஹானாகானும் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் தயாரிப்பதாகவும், சுஜய் ஜோஸ் இயக்குவதாகவும் கூறப்படுகிறது. படத்திற்கு கிங் என தலைப்பு வைக்கப் பட உள்ளதாம்.

Share this story