ஷங்கர் படத்திற்கு இப்படியொரு டைட்டிலா ? .. 'RC15' படத்தின் சூப்பர் அப்டேட் !

rc15

ஷங்கர் மற்றும் ராம் சரண் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.  ‌ 

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது.‌ அரசியல் மற்றும் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படம் தற்காலிகமாக 'ஆர்சி 15' என்ற தலைப்பில் அழைக்கப்பட்டு வருகிறது.  ‌இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என‌ 5 மொழிகளில்‌ பான் இந்தியா திரைப்படமாக தயாராகிறது. 

rc15

இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

rc15

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மார்ச் 27-ஆம் தேதி வெளியாகிறது. ராம் சரண் பிறந்தநாளையொட்டி இதற்கான அறிவிப்பு மார்ச் 26-ஆம் தேதியே வெளியிடப்பட உள்ளது. தேர்தல் ஆணையம் தொடர்பான கதைக்களம் கொண்ட இப்படத்திற்கு 'சிஇஓ' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தேர்தல் அதிகாரி கதாபாத்திரத்தில் ராம் சரண் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story