ஒரு பாடலுக்காக 15 கோடி செலவு செய்யும் ஷங்கர்... அதிர்ச்சியில் ‘ஆர்சி 15’ பட தயாரிப்பாளர் !

rc15

 ஷங்கர் இயக்கும் ‘ஆர்சி 15’ படத்தின் ஒரு பாடலுக்கு மட்டும் 15 கோடி செலவு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் பான் இந்தியா திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் முன்னணி நடிகர் ராம் சரண் ஹீரோவாக நடிக்கிறார். ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

rc15

இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தை மையமாக இப்படத்தின் கதை உருவாகி வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றை படமாக்க அடுத்த மாதம் நியூசிலாந்து செல்லவுள்ளராம் ஷங்கர். இதுவரை யாரும் செல்ல பகுதியில் இந்த பாடலின் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம். அதனால் இந்த பாடலுக்காக மட்டும் 15 கோடி வரை செலவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story