தமிழ் இயக்குனர் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார்... பிறந்தநாளையொட்டி வெளியான அறிவிப்பு !
கன்னட சூப்பர் சிவராஜ் குமார் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னடத்தில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் சிவராஜ் குமார். அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவர் நடிக்கும் படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழில் இளம் இயக்குனராக இருக்கும் கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் சிவராஜ் குமார் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அவர், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தை இயக்கியவர்.
‘சிவண்ணா எஸ்சிஎஃப்சி 01’(#ShivannaSCFC01) என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் என 4 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது. அதிக பொருட் செலவில் உருவாகும் இந்த படத்தை சுதீர் சந்திரா பிலிம் கம்பெனி தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் சிவராஜ் குமார் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள கான்செப்ட் போஸ்டரில் சிவராஜ் குமாரின் கெட்டப் இடம்பெற்றுள்ளது. அதிரடி ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தில் தென்னிந்திய திரைப்பட துறையை சேர்ந்த பிரபல நடிகர்கள் இப்படத்தில் நடிக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.