சிரஞ்சீவியை நேரில் சந்தித்த சிவராஜ்குமார்
1707135063959
சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் தமிழக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்தார்.தமிழகத்திலும், உலகளவிலும் ஜெயிலர் திரைப்படம் சக்கைபோடு போட்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஜெயிலர் திரைப்படத்தில் சிவராஜ்குமார் வரும் பட காட்சிகள் ராஜியுடன் ஆகட்டும் சண்டை காட்சிகள் அனைத்தும் மாஸ்ஸாக அமைந்தது. சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ சைட் பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் எனும் சிவண்ணா உடன் இணைந்து அடுத்த படத்தை துவங்க இருக்கிறார் இயக்குனர்.

இந்நிலையில் நடிகர் சிவராஜ்குமார், சிரஞ்சீவியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார். சிரஞ்சீவிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

