அஞ்சலி நடிக்கும் 50-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

அஞ்சலி நடிக்கும் 50-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

அஞ்சலி நடிக்கும் 50-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன்தொடங்கியுள்ளது. 

2006ம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குப் படமான 'போட்டோ' படத்திலும், அடுத்து தமிழில் 2007ம் ஆண்டு வெளிவந்த 'கற்றது தமிழ்' படம் மூலமும் அறிமுகமானவர் அஞ்சலி.தமிழில் தொடர்ந்து 'அங்காடித் தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, இறைவி, தரமணி, பேரன்பு' ஆகிய படங்கள் மூலம் அதிகமான பாராட்டுக்களைப் பெற்றார். தற்போது தமிழில் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் 50வது படமான 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

null


அது குறித்து, "கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி" படத்தின் மூலம் எனது 50வது படத்தின் படப்பிடிப்பில் அடியெடுத்து வைக்கும் இன்றைய நாளில் ஒரு அபாரமான பயணத்தின் தொடக்கம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 16 ஆண்டுகளாக எனது ஏற்றத் தாழ்வுகளில் பயணித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். இன்னும் சவாலான எல்லைகளைத் தொட இது என்னை உத்வேகப்படுத்தும்," என்று குறிப்பிட்டுள்ளார் அஞ்சலி.

Share this story