‘சலார்’ படப்பிடிப்பை முடித்த ஸ்ருதிஹாசன்... ஆதியாவை காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் !

Salaar

‘சலார்’ படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை நடிகை ஸ்ருதிஹாசன் நிறைவு செய்துள்ளார். 

‘கேஜிஎப்’ திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். அவர் இயக்கத்தில் வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் பிரபாஸ், இந்த படத்தை பெரிதும் நம்பியுள்ளார். 

Salaar

இந்த படத்தில் கதாநாயகியாக  ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இவர்களுடன் பிரபல நடிகர்கள் ஜெகபதி பாபு, பிரித்விராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஹம்பல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இப்படம்‌ உருவாகி வருகிறது. 

Salaar

கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் ‘ஆதியா’ என்ற அழகான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறது. இந்நிலையில் ‘சலார்’ படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை நடிகை ஸ்ருதிஹாசன் நிறைவு செய்துள்ளார். இதையொட்டி இயக்குனர் பிரசாந்த் நீலுடன் ஸ்ருதிஹாசன் இருக்கும் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  

Share this story