புது டில்லியில் வெளியாகும் ‘ ஸ்பை’ பட டீசர்.
ஈடி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மூலமாக கே. ராஜசேகர் தயாரித்து. பிரபல பட தொகுப்பாளரான கேரி பி ஹெச் இயக்கத்தில், சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்ஸின் மரணம் குறித்த ரகசியங்களை அடிப்படையாக கொண்ட உருவாகியுள்ள திரைப்படம் ‘ஸ்பை’. நிகில் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியா ஐஸ்வர்யா மேனன் மற்றும் சானியா என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து அபிநவ் கோமடம், மகரந்த் தேஷ், ஆர்யன் ராஜேஷ், நித்தின் மேத்தா, ரவி வர்மா, சோனியா நரேஷ் என பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ சரண் பகக்லா மற்றும் விஷால் சந்திரசேகர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்,இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தின் டீசர் புதுடெல்லியில் கர்தவ்யா பாதையில் அமைந்துள்ள சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே வருகிற 15ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாதையில் வெளியாகும் முதல் திரைப்பட டீசர் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் அதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியுள்ளது. படம் இன்மாதம் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.