போதை விவகாரத்தில் சிக்கிய மலையாள நடிகர்கள்- தடை விதித்த தயாரிப்பாளர் சங்கம்.

photo

மலையாள நடிகர்களான ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீ நாத் பாசி இருவரும் திரைப்படங்களில் நடிக்க மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தடைவிதித்துள்ளது.

photo

மலையாள நடிகர்களான ஷன்நிகம், ஸ்ரீ நாத் பாசி இருவரும் படப்பிடிப்பு தளத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும், ஹால்ஷீட் விஷயத்தில் குழறுபடி செய்வதாகவும்  இதனால் தயாரிப்பளர்களுக்கு பெரும் நஷ்டத்தை அவர்கள் விளைவிப்பதாவும் கூறி தயாரிப்பளர்கள் சங்கம் அவர்கள் நடிக்க தடை விதித்துள்ளது.

photo

இது குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ரஞ்சித் செய்தியாளர்களிடம் கூறியதாவது “ஷன்நிகம் , ஸ்ரீநாத் பாசி இருவரும் படப்பிடிப்பு தளத்தில் தடைசெய்யப்பட்ட  போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பகலைஞர்களுக்கு தொலையாக உள்ளது. படப்பிடிப்பிற்கு வருவதில்லை இதனால் கால்ஷீட்டில் பல குழப்பம் ஏற்படுகிறது. இது பெரும் சிக்கலை விளைவிக்கிறது. இதன்காரணமாக அவர்களுக்கு தடைவிதித்துள்ளோம், இவர்கள மட்டுமல்ல மலையாள திரையுலகில் பலர் போதைக்கு அடிமையாகியுள்ளனர். என தெரிவித்தார்.

 

Share this story