“மேட் இன் இந்தியா” பட அறிவிப்பை வெளியிட்ட 'ராஜமௌலி'.

photo

சமீப காலமாக உண்மை நிகழ்வுகள், வாழ்கை வரலாற்று படங்கள் என இம்மாதிரியான படங்கள் ரசிகர்களை கவர்ந்து அவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் தற்போது எஸ். எஸ் ராஜமௌலி ‘மேட் இன் இந்தியா’ என்ற வாழ்கை வரலாற்று படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

photo

இந்திய சினிமாவின் தந்தை என புகழப்படும் தாதா சாகிப் பால்கேயின் வாழ்கை வரலாறு படமாக உள்ளது. படத்திற்கு ‘மேட் இன் இந்தியா’ என பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தை நிதின் கக்கன் இயக்க, வருண் குப்தா மற்றும் எஸ்.எஸ் கார்த்திகேயா தயாரிக்கிறார். எஸ்.எஸ் ராஜமௌலி வழங்கும் இந்த படத்தின் அறிவிப்பை அவர் வெளியிட்டு “ இந்த கதையை முதன்முதலாக கேட்டபோது நான் உணர்ச்சிவசப்பட்டேன், ஒரு வாழ்கை வரலாற்றை உருவாக்குவது மிக கடினம். ஆனால் இந்திய சினிமா தந்தையின் வரலாற்றை கற்பனை செய்வது சுலபமானது. சற்று சவாலாந்தும் கூட ‘மேட் இன் இந்தியா’ படத்தை வழங்குவதில் பெருமைகொள்கிறேன்’ என் பதிவிட்டுள்ளார்.


 

Share this story