இனி போட முடியாது ஓட்டு, பிக்பாஸிற்கு பூட்டு? வழக்கில் சிக்கிய பிக்பாஸ் சீசன் 6.

ஹ்ப்ட்

இந்தியா முழுவதும் பிரபல சின்னத்திரை நிகழ்ச்சியான பிக்பாஸிற்கு  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிகழ்ச்சியை தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் நாகார்ஜூனா, கன்னடத்தில் சுதீப், மலையாளத்தில் மோகன்லால் மற்றும் ஹிந்தியில் சல்மான் கான் என அந்தந்த மொழிகளில் முன்னனி நடிகர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

photos

அந்த வகையில் தற்பொழுது தமிழில் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறதுஅதே போன்று  தெலுங்கிலும் ஆறாவது சீசன் நடந்து வருகிறது. வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தெலுங்கு பிக் பாஸ் ஷோவில் ஆபாசம் இருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்துள்ள ஆந்திர உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம், மத்திய அரசு, இரண்டு தெலுங்கு மாநிலங்கள் மற்றும் தொகுப்பாளர் நாகர்ஜுனா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

photos

இந்த தகவல் தீயாக பரவி வர , இதனால் ரசிகர்கள் ‘அப்போ நிகழ்ச்சிக்கு தடை விதிச்சிடுவாங்களா? ’ என்பது மாதிரியான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

 

Share this story