பூஜையுடன் துவங்கிய சந்தீப் கிஷனின் ‘மாயவன்2’ திரைப்படம்.

‘மாநகரம்’ புகழ் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘மாயவன்2’ படத்தின் பூஜை இன்று துவங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஏகே என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், சி.வி குமார் இயக்கும் படம் ‘மாயவன்2’ இதில் நடிகர் சந்தீப் கிஷன் நடிக்க உள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். சைன்டிபிக் ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தின் பூஜை கோலாகலமாக துவங்கியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு சி.வி குமார் இயக்கத்தில் நடிகர்களான சந்தீப் கிஷன், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், லாவண்யா திரிபதி உள்ளிடோர் நடிப்பில் ‘மாயவன்’ படம் வெளியானது அந்த படத்திற்கு ஜுப்ரான் இசையமைத்திருந்தார். படம் பெரிதாக வசூலிக்க வில்லை. இருந்தாலும் கொரோனா சமயத்தில் படத்தை ஓடிடி தளத்தில் பார்த்துவிட்டு பலரும் பாராட்டினர்.
இந்த நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இரண்டாம் பாகத்தை தயாரிக்க களத்தில் இறங்கியுள்ளனர். விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.