‘பான் இந்தியன் சுந்தரி’- மலையாள வெப்தொடரில் நடிகை ‘சன்னி லியோன்’!
நடிகை சன்னிலியோன் நடிப்பில் மலையாளத்தில் காமெடி கலந்த ஆக்ஷம் த்ரில்லரில் ‘பான் இந்தியன் சுந்தரி’ என்ற தலைப்பில் வெப்தொடர் உருவாக உள்ளது.

எச் ஆர் புரொசக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சதீஷ் இயக்க உள்ள வெப் தொடரின் கதையை பிரின்சி ட்ர்ன்னி மற்றும் லெனின் ஜானி ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த தொடரில் சன்னி லியோனுடன் இணைந்து ஜானி ஆண்டனி, அப்பானி சுரேஷ், மாளவிகா ஸ்ரீநாத், பீமன் ரகு, ஜான் விஜய், சஜிதா ஆகியோர் நடிக்கின்றனர். மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படம் தயாராகிறது.
‘ரங்கீலா’ படத்தின் மூலமாக மலையாள சினிமா உலகில் அறிமுகமான சன்னிலியோன் மம்மூட்டியின் ‘மதுர ராஜா’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். தொடர்ந்து அவர் நடிக்க உள்ள இந்த வெப் தொடர் நிச்சயம் அவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியை மலையாளத்தில் பெற்றுதரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ‘பான் இந்தியன் சுந்தரி’ தொடர்தான் மலையாளத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் தொடராகும்.

