காதல் மனைவியை காண ‘காதல்-தி கோர்’ படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகர் சூர்யா…….

photo

‘காதல் - தி கோர்’ பட படப்பிடிப்பு தளத்தில் மனைவி ஜோதிகா  மற்றும் மம்முட்டியை சந்தித்த நடிகர்  சூர்யா அவர்களுடன் உணவு  உண்டிருக்கிறார்; அதற்கான புகைப்படம் இணையத்தில்  வெளியாகி வைரலாகி வருகின்றன.

photo

தி கிரேட் இந்தியன் கிச்சன்படத்தை இயக்கிய பிரபலமான இயக்குநரான ஜியோ பேபி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்காதல்- தி கோர்’. இந்த படத்தில் நடிகர் மம்முட்டி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்கிறார்இந்தப்படத்தின் ஷூட்டிங் கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் தொடங்கிய நிலையில், தற்பொழுது  படப்பிடிப்பு கேரள மாநிலம் எர்ணா குளத்தில் நடைபெற்று  வருகிறது

photos

இந்தப்படத்தை மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி மற்றும் வேஃபேரர் ஃபிலிம் இணைந்து தயாரிக்கின்றனர். மேத்யூஸ் புலிகன் இசையமைத்து, சாலு கே தாமஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்தில் ஃபிரான்சிஸ் லூயிஸ் எடிட்டராக  பணியாற்றுகிறார்கள்.

photo

இந்த நிலையில் இன்று காதல் படபிடிப்பு தளத்திற்கு நடிகர் சூர்யா விசிட் அடித்துள்ளார், அதுமட்டும் அல்லாமல் நடிகர் மம்முட்டி மற்றும் ஜோதிகாவுடன் அமர்ந்து உணவும் அருந்தியுள்ளார். அதற்கான புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this story