பான் இந்தியா படமாக உருவாகும் வெங்கடேஷின் ‘சைந்தவ்’... பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு !

saindhav

வெங்கடேஷ் நடிப்பில் உருவாகும் ‘சைந்தவ்’ திரைப்படம் பூஜையுடன் இன்று தொடங்கியது. 

saindhav

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் வெங்கடேஷ், தனது முதல் பான் இந்தியா படத்தில் நடிக்கவுள்ளார். வெங்கடேஷின் 75வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ‘சைந்தவ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சைலேஷ் கொலனு இயக்கவுள்ளார். 

saindhav

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார். மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜானரில் உருவாகும் இந்த படத்தை நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 

saindhav

தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படம் வெங்கடேஷின் முதல் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் இன்று ஐதராபாத்திரத்தில் தொடங்கியது. இதையடுத்து விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

 

Share this story