பான் இந்தியா படத்தை இயக்கும் மிஷ்கினின் உதவி இயக்குனர்.. பூஜையுடன் தொடங்கிய பணிகள் !

Swayambhu

தெலுங்கு நடிகர் நிகில் நடிக்கும் பான் இந்தியா படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் மிஷ்கின். அவரது படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிவர்களில் முக்கியமானவர் பரத் கிருஷ்மாச்சாரி. தற்போது அவர், பான் இந்தியா படம் ஒன்றை இயக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் அப்படம் உருவாகவுள்ளது. 

Swayambhu

இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நிகில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தனுஷின் ‘வாத்தி’ படத்தில் ஹீரோயினாக நடித்த சம்யுக்தா நடிக்கிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ‘சுயம்பு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

Swayambhu

பிக்சல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது. இந்த நிகழ்வில் ‘வாரிசு’ தயாரிப்பாளர் தில் ராஜூ, அல்லு அர்ஜுனன் தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 

 


 

Share this story