விளையாட்டு வீரராக நடிக்கும் ராம் சரண்.. புதிய படத்தின் அப்டேட்

ram Charan 16

 ராம் சரண் தனது 16வது படத்தில் விளையாட்டு வீரராக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு பிறகு நடிகர் ராம்சரனின் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.  அதனால் அவர் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதை பூர்த்தி செய்யும் வகையில் ராம் சரணின்  16வது படத்தை ‘உப்பென்னா’ படத்தின் மூலம் பிரபல புச்சிபாபு சனா இயக்கவுள்ளார்.

ram Charan 16

'சீதாராமம்' படத்தின் மூலம் பிரபலமான மிருணாள் தாக்கூர் இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். சுமார் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்தப் படத்தின்‌ படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. 

இந்தப் படம் உண்மை சம்பவங்களை வைத்து சில கற்பனை கலந்து உருவாகும் திரைப்படம் ஆகும்.  இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் ராம் சரண் விளையாட்டு வீரராக நடிக்கிறார். அதனால் இந்த படம் முழுக்க முழுக்க விளையாட்டை சார்ந்து உருவாகும் திரைப்படமாகும். இதற்கிடையே தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this story