நடிகர் சிரஞ்சீவிக்கு கேன்சரா ?.. அவரே கொடுத்த விளக்கம் !

Chiranjeevi Konidela

நடிகர் சிரஞ்சீவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள அதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார். 

தெலுங்கில் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. நீண்ட நாட்களாக பிரபலமான நடிகராக வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தெலுங்கை தாண்டி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் பிசியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘காட்ஃபாதர்’ நல்ல வரவேற்பை பெற்றது. 

Chiranjeevi Konidela

இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இதற்கான சிகிச்சை இருந்து வருவதாகவும், தற்போது நலம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபகாலமாக சிரஞ்சீவியை சந்தித்து திரையுலக பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருவதாகவும் தகவல் கசிந்தது. 

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் சிரஞ்சீவி விளக்கமளித்துள்ளார். அதில், நான் புற்றுநோயால் பாதிக்கப்படவில்லை. வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனையை தான் நான் மேற்கொண்டேன். கேன்சர் இருந்தால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து விடலாம் என்பதற்காக பரிசோதனை செய்தேன். இது தவறான புரிந்து கொள்ளப்பட்டு செய்தியாக பரவி வருகிறது என்று கூறினார். நடிகர் சிரஞ்சீவியின் இந்த விளக்கம் ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது. 


 

 

Share this story