பிரதீப் ரங்கநாதனை அலேக்காக தூக்கிய தெலுங்கு ரசிகர்- இணையத்தை கலக்கும் கொண்டாட்ட வீடியோ.

photo

பிரதீப்பை கொண்டாடும் தெலுங்கு சினிமா ரசிகர்கள்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் தமிழில்  பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனதை தொடர்ந்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு இன்று ரிலீஸ் ஆனது.

photo

இந்த படத்தில் நாம் பார்த்த ஒரு கதாபாத்திரத்தை கூட, சட்டென்று மறந்து விட முடியாது, பல சேட்டைகள் செய்யும் சுட்டி சிறுவன் தொடங்கி , இடிந்து போன சமயத்தில் வாழ்கையை உணர்த்தும் அம்மா  ராதிகா வரை. பிரதீபின் அக்காவை பார்த்தால் அட… நம்ம வீட்டுல இருக்க அக்கா ,இல்ல…. பக்கத்து வீட்டு அக்கா மாதிரி இருக்குல என பலரையும் நினைக்க வைக்கிறது.

photo

 எல்லோரது வீடுகளிலும் மொபைல் போனை எடுத்தாலே, திட்டி தீர்க்கும் அம்மாவாக ராதிகா, ஷார்ப் அண்ட் கூர்ப் அப்பா, கூடி கும்மாளம் அடிக்க  மட்டும் அல்ல, பிரச்சனைனு வந்தாகூட நாங்க இருக்கோம் என இருக்கும் நண்பர் கூட்டம். இது எல்லாத்தையும் விட பாய் பெஸ்டி ரெவி தான் ஹய்லெட். இப்படியாக சமகால வாழ்வியல், காதல் என சிரிப்போடு கலந்த மெசேஜ் தான் படத்தின் பிளஸ். இப்படி படத்தை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.  அதிலும் படம் ஹிட் ஆனதற்கு நமது சமகால வாழ்வை படம் பிரதிபலித்தது தான் காரணம்.

photo

சரி தமிழில் கிடைத்த வரவேற்பு தெலுங்கில் கிடைக்குமா? என எதிர்பார்த்த நிலையில் படம் தெலுங்கிலும் ஹிட் அடித்துள்ளது, அதிலும் இன்று படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் பிரதீபை அலேக்காக தூக்கி கொண்டாடிவிட்டார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.


 

Share this story