ஆஸ்கார் வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஒளிர்ந்த டெஸ்லா கார்களின் விளக்குகள்.

photo

ஆஸ்கார் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலை கௌரவிக்கும் விதமாக டெஸ்லா நிறுவனம் பாடலின் மெட்டிற்கு ஏற்ப கார்களின் விளக்குகளை ஒளிரவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

photo

ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வசூல் வேட்டையாடிய திரைப்படம் ‘ஆர் ஆர் அர்’. இந்த படத்தின் பாடலான நாட்டு நாட்டு பாடலுக்காக படத்தின் இசையமைப்பாளரான  கீரவாணி சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கார் விருதை வென்றார். தொடர்ந்து பாடலாசிரியர் சந்திரபோஸ்ஸும் விருதை வென்றார். நீட்சியாக படக்குழுவிற்கு பிரதமர், அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

photo

அந்த வகையில் பிரபல கார் நிறுவனமான டெஸ்லா வித்தியாசமான முறையில் பாடலிற்காக கௌரவப்படுத்தியுள்ளனர். அதாவது, டெஸ்லா கார்களை RRR  என்ற வடிவில் நிறுத்தி இருள் சூழ்ந்ததும், நாட்டு நாட்டு பாடலின் பீட்டிற்கு ஏற்ப  விளக்குகளை ஒளிரவிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு, இணையத்தை கலக்கி வருகிறது.


 

Share this story