பாலிவுட் ஜாம்பவானுடன் கிரிக்கெட் ஜாம்பவான்... புகைப்படங்கள் வைரல்..

பாலிவுட் ஜாம்பவானுடன் கிரிக்கெட் ஜாம்பவான்... புகைப்படங்கள் வைரல்..

பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் மகேந்திர சிங் தோனியும், அமிதாப் பச்சனும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்திய அணியின் கேப்டனாக 11 ஆண்டுகள் விளையாடியுள்ள தோனி, அனைத்து வித ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார். உலக அளவில் சிறந்த கேப்டனாகவும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதற்கிடையே, நீண்ட நாட்களாக நீளமான தலை முடியுடன் வலம் வந்த தோனி, தற்போது புதிய தோற்றத்தில் மாறியுள்ளார். ஆலிம் ஹக்கிம் என்பவர் அவருக்கு புதி ஹேர்ஸ்டைல் செய்துள்ளார். விண்டேஜ் லுக்கில் தோனி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளன. இந்நிலையில், மும்பையில் அமிதாப்பச்சனை தோனி சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Share this story