பிரியங்கா சோப்ராவையும் விட்டு வைக்காத டீப் ஃபேக்

பிரியங்கா சோப்ராவையும் விட்டு வைக்காத டீப் ஃபேக்

தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.  இவர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

பிரியங்கா சோப்ராவையும் விட்டு வைக்காத டீப் ஃபேக்

இந்நிலையில், டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் நடிகை ராஷ்மிகாவை தவறாக சித்தரித்து வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதற்கு வேதனை தெரிவித்து ராஷ்மிகா இணையத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு பிரபலங்கள், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இந்நிலையில், டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்து, அதனால் லாபம் கிடைப்பதாக விளம்பரம் செய்வது போல வீடியோ வெளியாகி உள்ளது. 
 

Share this story