சந்தீப் ரெட்டியை தவறாக ரசிகர்கள் புரிந்து கொண்டனர்... அனுராக் காஷ்யப் வருத்தம்...

சந்தீப் ரெட்டியை தவறாக ரசிகர்கள் புரிந்து கொண்டனர்... அனுராக் காஷ்யப் வருத்தம்... 

அர்ஜூன் ரெட்டி படத்திற்கு பிறகு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இந்தியில் உருவாகி உள்ள திரைப்படம் அனிமல். இப்படத்தில், ரன்பீர் கபூர் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சைக்கோ கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. ஹஸ்வர்தன் ராமேஸ்வர் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். இத்திரைப்படம் கடந்த 1-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது

சந்தீப் ரெட்டியை தவறாக ரசிகர்கள் புரிந்து கொண்டனர்... அனுராக் காஷ்யப் வருத்தம்...  

அதே சமயம் சிலர் இயக்குநர் சந்தீப் ரெட்டிக்கும், அனிமல் படத்திற்கும் ஆதரவு தெரிவித்து வந்தனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அவமதிக்கப்பட்ட இயக்குநர் சந்தீப் ரெட்டி என ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், தான் அனிமல் திரைப்படத்தை 2 முறை கண்டு ரசித்ததாகவும் கூறி உள்ளார்.
 

Share this story