பிருத்விராஜ் நடிக்கும் குருவாயூர் அம்பலநடையில் முதல் தோற்றம்

பிருத்விராஜ் நடிக்கும் குருவாயூர் அம்பலநடையில் முதல் தோற்றம் 

கே.ஜி.எப். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கினார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் வில்லனாகவும், ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும் நடித்தார். கடந்த 22-ம் தேதி இத்திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

பிருத்விராஜ் நடிக்கும் குருவாயூர் அம்பலநடையில் முதல் தோற்றம் 

இந்நிலையில், சலார் படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்ற பிருத்விராஜ், அடுத்து மீண்டும் ஒரு சின்ன பட்ஜெட் படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் இயக்குநர் விபின் தாஸ் இந்த படத்தை இயக்குகிறார். அந்த படத்தில் நாயகனாக நடித்த மின்னல் முரளி இயக்குனர் பஷில் ஜோசப் தான் இதிலும் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் பிருத்விராஜ் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். படத்திற்கு குருவாயூர் அம்பலநடையில் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.   இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி உள்ளது. 

Share this story