வருஷங்களுக்கு ஷேஷம் படத்தின் முதல் தோற்றம் வெளியானது

மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஹிருதயம். மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் ஹிருதயம் திரைப்படம் பிரபலம் அடைந்தது. இப்படத்தில் மோகன்லாலின் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் நடித்திருந்தார். தர்ஷனா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹிருதயம் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்தது. இதன் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசனின் தம்பி தியான் ஸ்ரீனிவாசன், பேசில் ஜோசப், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர். இப்படத்திற்கு வருஷங்களுக்கு ஷேஷம் என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.
#VarshangalkkuShesham movie packup video...
— AB George (@AbGeorge_) December 20, 2023
A Vineeth Sreenivasan star studded movie...
Summer 2024 Release... pic.twitter.com/XYYEryc7X1
கொச்சியில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. அதோடு, படத்தின் முதல் தோற்றத்தையும் படக்குழு வெளியிட்டு உள்ளது.