ஹாய் நான்னா படத்திலிருந்து முதல் பாடல் நாளை ரிலீஸ்

ஹாய் நான்னா படத்திலிருந்து முதல் பாடல் நாளை ரிலீஸ்

நானி நடிக்கும் ஹாய் நான்னா படத்திலிருந்து முதல் பாடல் நாளை வெளியாகிறது. 

ஷியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா, தசரா உள்ளிட்ட படங்களை தொடர்ந்து புதிய படத்தில் நானி நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் சவுர்யா இந்த படத்தை இயக்குகிறார். படத்தில் நானிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் ஒப்பந்ததமாகியுள்ளார். இவர் ஏற்கனவே சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு அறிமுகமானவர். அப்பா - மகள் பாசத்தை கதைக்களமாக கொண்டு ஹாய் நான்னா திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதை தொடர்ந்து, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஹாய் நான்னா படத்திலிருந்து நிழலிலேய என்ற முதல் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Share this story