காதல் தி கோர் படத்தின் முதல் பாடல் இன்று ரிலீஸ்

காதல் தி கோர் படத்தின் முதல் பாடல் இன்று ரிலீஸ்

தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கி பிரபலமான  இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘காதம் தி கோர்’. இந்த படத்தை மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு மேத்யூஸ் புலிகன் இசையமைத்துள்ளார். சாலு கே தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  காதல் தி கோர் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் முடிந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா மீண்டும் மலையாள திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

காதல் தி கோர் படத்தின் முதல் பாடல் இன்று ரிலீஸ்

காதல் தி கோர் படம் நவம்பர் 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், படத்திலிருந்து முதல் பாடல் இன்று வௌியாகிறது. 
 

Share this story