வடமாநிலங்களில் கிடைத்த வரவேற்பு... உலகம் முழுவதும் வெளியாகும் 'தி கேரள ஸ்டோரி' !

the Kerala story

வட மாநிலங்களில் கிடைத்த வரவேற்பையடுத்து 137 நாடுகளில் 'தி கேரள ஸ்டோரி' திரைப்படம் நாளை வெளியாகிறது.‌

இந்தியாவின் பெரிய சர்ச்சை ஏற்பட்டுள்ள திரைப்படம் 'தி கேரள ஸ்டோரி'. சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் முதலில் கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து கடந்த 5-ஆம் தேதி இந்த இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. 

the Kerala story

ஆனால் ஒரு தரப்பினர் எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த படத்திற்கு அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள் என பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.‌ கேரளாவை சேர்ந்த அப்பாவி பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பிற்கு அனுப்பப்படுகின்றனர்‌. கேரளாவில் மட்டும் இதுபோன்று 32 ஆயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி நடைபெற்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதை அமைந்துள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு மேற்கு வங்கம் சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உத்திரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் படத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் வட மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் நாளை முதல் 137 நாடுகளில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

Share this story