பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சலார் முன்னோட்டம் வெளியானது
கே.ஜி.எப். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் வில்லனாகவும், ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகவுள்ளது. அண்மையில் இயக்குநர் பிரசாந்த் நீல் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து படப்பிடிப்பு தளத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. இப்படத்தின் டீசர் கடந்த ஜூலை 6-ம் தேதி அதிகாலை வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.