காதல் தி கோர் படத்திற்கு மீண்டும் கிளம்பும் எதிர்ப்பு

காதல் தி கோர் படத்திற்கு மீண்டும் கிளம்பும் எதிர்ப்பு

தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கி பிரபலமான  இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘காதம் தி கோர்’. இந்த படத்தை மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு மேத்யூஸ் புலிகன் இசையமைத்துள்ளார். சாலு கே தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா மீண்டும் மலையாள திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தில் நடிகர் மம்மூட்டி ஓரினச் சேர்க்கையாளராக நடித்திருப்பதாக கூறி படத்தை வெளியிட ஒரு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டது.இருப்பினும் படம் வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்று வந்தது. 

காதல் தி கோர் படத்திற்கு மீண்டும் கிளம்பும் எதிர்ப்பு

இந்நிலையில், காதல் தி கோர் படத்திற்கு கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இப்படம் கிறிஸ்துவத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தன்பாலின ஈர்ப்பாளர்களை காட்டிப்படுத்த கிறிஸ்துவ நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

Share this story