விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்

விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம் 

மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் 'விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்' திரைப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது. 

இந்தப் படத்தில் ஷனாயா கபூர்- ரோஷன் மேகா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் உருவாகி வரும் நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு நவராத்திரி பண்டிகையின்போது வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. நந்தகிஷோர் இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் தொடங்கி இருக்கிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 

விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம் 

காதல், பழிக்கு பழி வாங்கும் உணர்வு என இரண்டு நேர் எதிர் உணர்ச்சிகளுக்கு இடையேயான மோதலை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகி வருகிறது. 

Share this story