காதல் தி கோர் படத்தின் முன்னோட்டம் ரிலீஸ்

காதல் தி கோர் படத்தின் முன்னோட்டம் ரிலீஸ்

தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கி பிரபலமான  இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘காதம் தி கோர்’. இந்த படத்தை மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு மேத்யூஸ் புலிகன் இசையமைத்துள்ளார். சாலு கே தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  காதல் தி கோர் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், காதல் தி கோர் படத்தின் முன்னோட்டம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா மீண்டும் மலையாள திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this story