முன்பதிவில் அசத்தும் மலைக்கோட்டை வாலிபன்!

முன்பதிவில் அசத்தும் மலைக்கோட்டை வாலிபன்!

மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மலைக்கோட்டை வாலிபன்’. ‘ஆமென்’, ‘அங்காமலி டைரீஸ்’, ‘ஈ மா யூ‘, ‘ஜல்லிக்கட்டு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இப்படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மராத்தி நடிகையான சோனாலி குல்கர்னி நடித்து வருகிறார். இவர்களுடன் ஹரீஷ் பெரேடி,  டேனிஷ் சேட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மலையாளம் மற்றும் தமிழ் என இருமொழிகளில் உருவாகி உள்ள இப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. மல்யுத்த வீரராக மோகன்லால் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் ராஜஸ்தானில் நடைபெற்று முடிந்தது. 

முன்பதிவில் அசத்தும் மலைக்கோட்டை வாலிபன்!

இத்திரைப்படம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், முன்பதிவில் இத்திரைப்படம் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளுக்கான காட்சிக்காக மட்டும் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யுப்பட்டுள்ளன. 
 

Share this story