‘ஜூனியர் என் டி ஆர்’ படத்தால் பற்றி எரிந்த திரையரங்கம்.

photo

ஜூனியர் என் டி ஆரின் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கம் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

photo

தெலுங்கு திரையுலகில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர்  ஜூனியர் என்டி ஆர். இவர் கடந்த 2001ஆம் ஆண்டு 'நின்னு சூடாலனி' எனும் திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபலமானார், இவர்  நடிகராக மட்டுமின்றி சிறந்த நடன கலைஞர், பின்னணி பாடகர் என பன்முகம திறமை கொண்ட கலைஞராக வளம்வருகிறார். இந்த நிலையில் இவர் ராம்சரணுடன் இணைந்து நடித்த ஆர் ஆர் ஆர் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ராஜமௌலி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

photo

இதன் தொடர்ச்சியாக  ஜூனியர் என்டி ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் கடந்த 2003ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘சிம்ஹாத்ரி’ திரைப்படம் ரசிகர்களுக்காக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. விஜயவாடாவில் திரையிடப்பட்ட இந்த பட வெளியீட்டை ரசிகர்கள் மேள தாளத்துடன் கொண்டாடினர், தொடர்ந்து திரையரங்கினுள் பட்டாசு வெளித்து கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றனர். அந்த சமயத்தில் திரையரங்க இருக்கைகள் பற்றி எரியவே பரபரப்பு ஏற்பட்டது. இதனால் படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு ரசிகர்களை அவசர அவசரமாக வெளியே அனுப்பியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.  தொடந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.


 

Share this story