நானி’ஸ் ‘தசரா’ திரைப்படத்தின் தீக்காரி லிரிக்கள் வீடியோ பாடல் வெளியீடு.
1676469402061

நானியின் அசத்தலான நடிப்பில் தயாராகியுள்ள தசரா திரைப்படத்தின் தீக்காரி லிரிக்கள் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீ காந்த் ஓடிலா இயக்கத்தில், நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தசரா. வித்தியாசமான கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்திலிருந்து பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் , எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
பாடலாசிரியர் விவேக் வரிகள் அமைக்க சந்தோஷ் நாராயணன் இந்த பாடலை பாடியுள்ளார். படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மார்ச் மாதம் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.