‘தேகிம்பு’- ‘துணிவு’ படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியீடு.
1672667339976

நடிகர் அஜித் குமார், எச் வினோத், போனிகபூர் ஆகியோரது கூட்டணியில் வரும் பொங்கலை குறிவைத்து தயாராகிவரும் திரைப்படம் ‘துணிவு’ இந்த படம் தெலுங்கில் ‘தேகிம்பு’ என்கிற பெயரில் வெளியாகிறது. தமிழில் படத்தில் டிரைலர் வெளியாகி யூட்டியூபில் புதிய சாதனைகளை படைத்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரகனி, வீரா, ஜான் கொக்கன் என பலர் நடித்துள்ளனர். வங்கி கொள்ளையை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தில், மஞ்சுவாரியரின் அனல் பறக்கும் ஸ்டண்ட் காட்கிகளும் டிரைலரில் இடம் பெற்றுள்ளது. விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவிற்கு போட்டியாக வெளியாவதால் இந்த ரேஸில் எந்த படம் ரசிகர்களை கவரும், அல்லது இரண்டு படமும் வெற்றியடையுமா. என்பதை பொறுத்திருந்து காணலாம்.