குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு டூர்... இணையத்தை கலக்கும் துல்கர் சல்மானின் புகைப்படங்கள் !

dulquer salmaan

 நடிகர் துல்கர் சல்மான், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

dulquer salmaan

தென்னிந்தியாவில் கவனிக்க தக்க நடிகராக மாறிவிட்டார் நடிகர் துல்கர் சல்மான். மலையாளத்தின் முன்னணி நடிகரான மம்மூட்டியின் மகனான அவர், கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான ‘செகன்ட் ஷோ’ என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹோ சினாமிகா ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

dulquer salmaan

மலையாளத்தில் உஸ்தாத் ஹோட்டல், 5 சுந்தரிகள், பட்டம் கம்பம், சலாலா மொபைல், பெங்களூர் நாட்கள், விக்ரமாதித்யன், ஞான், 100 நாட்கள் காதல், சார்லி, குரூப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் மகாநதி படத்தின் மூலம் அறிமுகமானார். அதேநேரம் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘சீதாராமம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

dulquer salmaan

தற்போது மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் நடித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 2011-ஆம் ஆண்டு சபியா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வெளிநாட்டில் நடிகர் துல்கர் சல்மான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Share this story