விபத்தில் சிக்கிய ‘டோவினோ தாமஸ்’ – நடந்தது என்ன?

photo

பிரபல மலையால நடிகர் டோவினோ தாமஸ் படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் விபத்தில் சிக்கி காயமடைந்ததாகவும். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

photo

மலையாளத்தில் மிக பிரபலமான நடிகர் டொவினோ தாமஸ், இவர் தமிழில் தனுஷின் ‘மாரி2’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ‘நடிகர் திலகம்’ படப்பிடிப்பில் நடிதுக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி காலில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை எடுத்துவருகிறார். தொடர்ந்து இரண்டு வாரங்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.


இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அதிந்து போயுள்ளனர். தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this story